மே 15, நல்லம்பள்ளி (Dharmapuri News): தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி அருகே பாகல்பட்டியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 24) என்பவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கதிரவன் (வயது 22) என்பவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த 35 வயது பெண்ணுடன் அரிகிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், நாளடைவில் தகாத உறவாக மாறியது. கணவனை இழந்த அவர் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே, அவரின் 15 வயதுடைய மூத்த மகளுக்கும், கதிரவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு அரிகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ள நிலையில், கதிரவனையும் எச்சரித்துள்ளார். Young Girl Complaint Against Temple Priest: பாலியல் தொழிலில் தள்ள முயற்சித்த கோவில் பூசாரி; இளம்பெண் பரபரப்பு புகார்..!
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அரிகிருஷ்ணன் மறைந்திருந்து பார்த்துள்ளார். நள்ளிரவில் கதிரவன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அவரை பின்தொடர்ந்தார். நேற்று அதிகாலையில் தனது காதலியை வழக்கமாக சந்திக்கும் இடத்தில் அவர் காத்திருக்கும் போது, அங்கு வந்த அரிகிரிஷ்ணன் இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஆத்திரத்தில் கதிரவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை (knife) எடுத்து, அரிகிருஷ்ணன் வயிற்றில் பலமாக குத்தினார். இதில், அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நிலையிலும், வயிற்றில் இருந்த கத்தியை பிடுங்கி, பதிலுக்கு கதிரவன் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், இருவரும் படுகாயத்துடன் கீழே விழுந்தனர்.
இந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம் அரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். கழுத்து நரம்பு துண்டான நிலையில் உள்ள கதிரவன் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.