Husband Kills Wife in Ariyalur (Photo Credit: YouTube)

ஏப்ரல் 10, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி மூர்த்தி - ராணி. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மூர்த்தி தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர், தனது தாய் வீட்டிற்கு சென்றார். Thanjavur Shocker: காவல்நிலையம் முன் பாசப்போராட்டம்.. விஷம் குடித்த விபரீதத்தால் இளம்பெண் பலி..!

கழுத்தை இறுக்கிக் கொலை:

பின்னர், சமாதானம் பேசுவதுபோல் செல்போனில் கூறி வரவழைத்தார். வீட்டிற்கு வந்த தனது மனைவியிடம் மீண்டும் சண்டையிட்டு, தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை (Murder) செய்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், கொலை செய்தது உறுதியானதால், கணவர் மூர்த்திக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.