ஏப்ரல் 10, ஆக்ரா (Uttar Pradesh News): இந்திய அரசாங்கம் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு. பிரசவத்திற்குப் பிறகு தங்களைக் கவனித்துக் கொள்வதில் சில உதவிகளைப் பெறுவதற்காகவும் உதவுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜனனி சுரக்ஷா யோஜனா (Janani Suraksha Yojana) திட்டத்தின் கீழ், இந்திய அரசு பணம் வழங்கத் தொடங்கியது. இது தவிர, கருத்தடை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் பெண்களுக்கு ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுகின்றன. அத்தையிடம் மனதை பறிகொடுத்த மருமகன்.. ஓட்டம் பிடித்த ஜோடி..!
சுகாதார மையத்தில் மோசடி:
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் சமூக சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் நடத்தப்படும் ஜனனி சுரக்ஷா யோஜனா மற்றும் பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைக்கு சட்டவிரோதமாக ஊக்கத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஒரு வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், ஒரு பெண்ணின் பெயரில் 25 பிரசவங்கள் மற்றும் 5 கருத்தடை அறுவை சிகிச்சைகள் என அதிகமுறை பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வு அனைத்தும் இரண்டரை ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் நிதி ஒதுக்கீடு அறிக்கையை, தணிக்கைக் குழு பார்த்தபோது, அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர் மோசடியில் ஈடுபட்ட பெண்கள்:
இதன் பின்னர், ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கிராமப்புற பெண்களுக்கு ரூ.1400 ஊதியமும், நகர்ப்புற பெண்களுக்கு அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது, 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும், அப்பெண் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால், 2000 ரூபாய் கட்டணம் செலுத்தப்படுகிறது. இப்பணம் நேரடியாக பெண்ணின் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், தணிக்கைக் குழு பணம் செலுத்தும் அறிக்கையைப் பார்த்தபோது, கிருஷ்ண குமாரி என்ற பெண்ணின் பெயரில் மீண்டும் மீண்டும் பணம் செலுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். வெறும் இரண்டரை ஆண்டுகளில், அப்பெண்ணுக்கு 25 பிரசவங்களுக்கும் 5 கருத்தடை அறுவை சிகிச்சைகளுக்கும் பணம் வழங்கப்பட்டது.
கடும் நடவடிக்கை:
இதனைத் தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மோசடி நீண்ட காலமாக நடந்து வருவது கண்டறியப்பட்டது. சுகாதார மையத்தின் ஊழியர்கள், ஒரே பெண்ணின் பெயருக்கு பல முறை பணம் செலுத்தும் தொகையை அனுப்பி வந்தனர். இதன் பிறகு பணத்தை அவர்கள் பிரித்துக் கொண்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீதும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.