Bride Mother Escapes With Groom (Photo Credit: @SachinGuptaUP X)

ஏப்ரல் 10, அலிகார் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அலிகார் (Aligarh) மாவட்டத்தில் உள்ள மத்ராக் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (வயது 40). இவரது மகள் ஷிவானிக்கும், ராகுல் (வயது 20) என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. இதனையடுத்து, திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. 3-Month-Old Baby Dies: அழுதுகொண்டே இருந்த குழந்தை; தாயின் விபரீத செயலால் 3 மாத கைக்குழந்தை பலி..!

மாமியார், மருமகன் தப்பியோட்டம்:

பின்னர், வருங்கால மருமகன் தனது மாமியாருக்கு ஒரு மொபைல் போனை பரிசாக அளித்தார். இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டனர். நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில், மணமகன் ராகுல் திடீரென காணவில்லை. ஷிவானியின் தாய் அனிதாவும் காணாமல் போனார். இதுகுறித்த விசாரணையில், இருவரும் இணைந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. வீட்டைவிட்டுச் சென்றது மட்டுமின்றி திருமணத்துக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.2.5 லட்சம் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளார்.

போலீஸ் விசாரணை:

இதுகுறித்த விசாரணையில், மருமகன் அடிக்கடி தனது மாமியார் வீட்டிற்கு வருவார். அவர், தனது மாமியாருடன் அறையில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார். இதனால் நாங்கள் யாரும் அவரை சந்தேகிக்கவில்லை. இவ்வாறு குடும்பத்தினர் கூறினர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாயமான இருவரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.