பிப்ரவரி 16, பட்டுக்கோட்டை (Pattukkottai): பட்டுக்கோட்டை அருகே உள்ள தாம்பரம் கோட்டையை சேர்ந்தவர் மணிமாறன். இவருக்கு வயது 25. இவரின் தந்தை சுப்பிரமணி. மணிமாறன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு சென்று அங்கு பணிபுரிந்து கொண்டு இருந்தார். ஆனால் அங்கு போதுமான வருமானம் கொடுக்காத காரணத்தினால் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பியுள்ளார். Heart-Shaped Formations in Space: நாசா பகிர்ந்த இதய வடிவ விண்மீன் திரள்.. காதலர்கள் நெகிழ்ச்சி..!
இங்கு தொடர்ந்து தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு தந்தையை வெட்டி கொன்றார். இத்தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த தாமரங்கோட்டை காவல்துறையினர் மணிமாறனை கைது செய்தனர். தந்தை என்று பாராமலும் வெட்டிக்கொலை செய்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.