ஆகஸ்ட் 25, விருத்தாசலம் (Cuddalore News): கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல ஏதுவாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வேன் மற்றும் பேருந்து சேவையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்ட வேன் ஒன்று கோ.பூவனூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. Chennai News: மின்வாரிய அதிகாரிகளின் 100% அலட்சியம்.. சென்னை தூய்மை பணியாளர் பலியான விவகாரத்தில் உறவினர்கள் குமுறல்.!
விருத்தாசலத்தில் ரயில் தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து :
வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டனர். இந்த விபத்தில் வேன் ஓட்டுனர், 10 மாணவ, மாணவியர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். வேன் தண்டவாளத்திலேயே கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், அதற்கான காரணம் தெரியவில்லை. தேனி: "என் லவ்வர் கூட போறேன்.. தேடி வராதீங்க" - கூலி வேலை செய்து காப்பாற்றிய தந்தையை தவிக்கவிட்டு சென்ற நர்சிங் மாணவி.!
வேன் ஓட்டுநர், பள்ளி மாணவர்கள் காயம் :
நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் ரயில் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை நிறைவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தங்களது பிள்ளைகள் சென்ற வேன் விபத்திற்குள்ளான தகவல் அறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு பதறி சென்றுள்ளனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.