Chennai Airport (Photo Credit: Wikipedia)

மே 30, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் (Chennai Airport) இருந்து அபுதாபிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில், பயணம் செய்யவிருந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். பின்னர், குடியுரிமை சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, அமெரிக்கா குடியுரிமை பெற்ற பெத்தனன் இளங்கோ (வயது 47) என்ற பயணி ஒருவர், தனது தந்தையுடன் அபுதாபி வழியாக சென்று, அங்கிருந்து அமெரிக்கா செல்ல வந்திருந்தார். அப்போது, திடீரென பெத்தனன் இளங்கோ, தனது ஆடைகளை அவிழ்த்து போட்டு, நிர்வாணமாக ஓடியுள்ளார். இதனை கண்டு சக பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் இருந்தவர்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். Petrol Bomb Attack On Govt Bus: அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது..!

உடனடியாக அங்கு வந்த விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் நிர்வாணமாக ஓடிய பயணியை பிடித்து, ஆடைகளை உடுத்திக்கொள்ள வற்புறுத்தி போடச் செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக, அவருடைய தந்தையிடம் விசாரிக்கையில், தனது மகன் மன அழுத்தத்தில் இருந்ததால், இவ்வாறு நடந்து கொண்டதாக கூறியுள்ளார். இதற்கு, விமான நிறுவனம் தந்தை-மகன் இருவரது பயணத்தையும் ரத்து செய்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்துவிட்டு, பின்னர் பயணம் செய்யலாம் என பதிலளித்துள்ளது.

மேலும், விசாரணையில் தந்தை-மகன் இருவரும் மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து, இவர்கள் இருவரையும் மீண்டும் மதுரையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கே அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தினால், சற்று நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.