
பிப்ரவரி 17, செய்யாறு (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 22). லாரி ஓட்டுநரான இவர், 13 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் பேசி பழகி வந்தார். சில மாதங்களுக்கு முன் ஆசை வார்த்தை கூறி, மாணவியை நேரில் வரவழைத்துள்ளார். அவரை நம்பி சென்ற மாணவியை, தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்துள்ளார். மேலும், இதனை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். Wife Kills Husband: கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
மாணவி பலாத்காரம்:
இதனால், பயந்துபோன மாணவியும், தான் பலாத்காரம் செய்யப்பட்டதை யாரிடமும் சொல்லவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அவரை பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக (Pregnant) இருப்பதாக தெரிவித்தனர்.
லாரி ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு:
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது, சத்தியமூர்த்தி தன்னை பலாத்காரம் செய்ததை தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், செய்யாறு அனைத்து மகளிர் காவல்துறையினர், சத்தியமூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3