Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 17, கடையநல்லூர் (Tenkasi News): தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த தம்பதி முத்துக்குமார் - மரியா ஆரோக்கிய செல்வி (வயது 30). இத்தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். முத்துக்குமார் மஞ்சள்காமாலை (Jaundice) நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென மயக்கம் அடைந்துவிட்டார் எனக் கூறி, ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முத்துக்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆனால், அவர் இறப்பிற்கான காரணம் குறித்து அறிய, முத்துக்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். Mayiladuthurai Double Murder: மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் கொலையில் திருப்பம்.. காரணம் என்ன? காவல்துறை விளக்கம்.!

பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்:

அதன் முடிவில், முத்துக்குமார் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனிடையே, நொச்சிகுளம் கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்த மரியா ஆரோக்கிய செல்வி, தனது கணவர் மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை என்றும், தான் கொலை (Murder) செய்ததாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக, சேர்ந்தமரம் காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த முத்துக்குமார் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதும், மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்ததும் தெரியவந்தது.

கொடுமை தாங்காமல் கணவரை கொலை செய்த மனைவி:

இதனால், அவரது கொடுமையை தாங்க முடியாமல், அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற போது, அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன்பின்னர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் மஞ்சள் காமாலையில் எனது கணவர் மயங்கிவிட்டார் எனக் கூறி நம்ப வைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மரியா ஆரோக்கிய செல்வி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.