Suicide File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 21, திருச்சி (Trichy): திருச்சி இருங்களூரில் தனியார் செவிலியர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பாரா மெடிக்கல், பார்மசி, நர்சிங், யோகா என பல பிரிவுகளில் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கிழக்கு வளவு அரியூர்நாடு பகுதியை சேர்ந்த சத்தியப்ரீத்தி (20), இறுதியாண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். Arjuna Award 2023 : 26 பேருக்கு அர்ஜுனா விருது.. வாங்குபவர்களின் முழுப்பட்டியல் இதோ..!

மாணவி தற்கொலை: இந்நிலையில் நேற்று மாணவி சத்தியப்ரீத்தி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம், காவல்துறையினருக்கும், இறந்த மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம், இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தார். இந்த நிலையில் கல்லூரியில் பணம் கட்ட சொல்லி நெருக்கடி கொடுத்து, தகாத வார்த்தைகளால் இழிவு படுத்தியதால் தான், அந்த மாணவி தற்கொலை செய்துக் கொண்டதாக, சக மாணவிகள் மற்றும் இறந்த மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டினர். மேலும் கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.