மே 11, திருப்பூர் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் 2-வது தெருவை சேர்ந்த தம்பதி பிரகாஷ் (வயது 36) - உமா மகேஷ்வரி. பிரகாஷ் சிட்கோ பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது மனைவி, தாய் மற்றும் சகோதரர் உடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பிரகாஷ் கிரெடிட் கார்டு (Credit Card) வாங்கி உள்ளார். இதற்கு, வீட்டில் உள்ளவர்கள் கிரெடிட் கார்டு வேண்டாம் என கூறியுள்ளதை அடுத்து, அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைக்க பிரகாஷ் முடிவு எடுத்துள்ளார். Trichy Shocker: அம்மாவை காதலித்து ஏமாற்றிய இளைஞர்; நண்பருடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மகன்..! திருச்சியில் பகீர் சம்பவம்..!
பண மோசடி: இந்நிலையில், பெண் ஒருவர் தான் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, பிரகாஷை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரிடம், பிரகாஷ் தனக்கு கிரெடிட் கார்டு தேவை இல்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த பெண் உங்களுக்கு தற்போது ஒரு ஓடிபி (OTP) வரும், அந்த எண்ணை தெரிவித்தால் உடனடியாக கிரெடிட் கார்டு ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் தனக்கு வந்த ஓடிபி எண்ணை அப்பெண்ணிடம் தெரிவித்த சிறிது நேரத்தில் பிரகாஷின் கிரெடிட் கார்ட் மூலம் ரூ.1 லட்சத்திற்கு பொருட்கள் வாங்கப்பட்டுள்ளதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வங்கி நிர்வாகத்திடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஆனால், வங்கி தரப்பில் பணம் முறையாக செலுத்தப்பட்டுள்ளது. இதனால், பணத்தை திரும்ப செலுத்துமாறு அவர்கள் கூறினர்.
விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை: இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக தனது நண்பர்கள் உதவியுடன் சைபர் கிரைம் காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல இடங்களில் பிரகாஷ் புகார் கொடுத்தும் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், வங்கியில் இருந்தும் பணத்தை திரும்ப செலுத்துமாறு பிரகாஷுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அவர், விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக, நல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.