Boy Drowns in Kollidam River (Photo Credit:: @dkarthikTOI / @thiruvanaikovil X)

மே 23, கொள்ளிடம் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆறு (Kollidam River), நேப்பியர் பாலம் பகுதியில் உள்ள தடுப்பணையில் நீர் நிரம்பி இருக்கிறது. வார இறுதி நாட்களில் உள்ளூரை சேர்ந்த சிறுவர்கள், தங்களின் நண்பர்களுடன் தடுப்பணை நீரில் குளித்து செல்வது வழக்கம். அப்பகுதி ஆபத்தான சூழல் கொண்ட, புதைமணல் நிறைந்த பகுதி என்பதால் குளிக்க வேண்டாம் என காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதாகையும் அங்கு இடம்பெற்று இருக்கும். ஆனால், சிறார்கள் மற்றும் இளைஞர்கள் எந்த விதமான பயமும் இன்றி இப்பகுதியில் குளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். Elephant BabiesMorning Walk: குட்டி யானைகளின் சுட்டி நடைப்பயிற்சி; தெப்பக்காடு யானைகள் முகாமில் நெகிழ்ச்சி.! 

15 வயது சிறுவன் பரிதாப பலி:

இதனிடையே, நேற்று முன்தினம் மதியம் உள்ளூரை சேர்ந்த 10ம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் ஷாம் ரோஷன் (வயது 15) என்பவர், கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு குளிக்க வந்துள்ளார். இவர் நீரில் மூழ்கி மாயமான நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுவனின் உடலை தேடி வந்தனர். முதல் நாள் தேடலில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. இதனால் ஸ்கூபா டைவர்கள் உதவியுடன் சிறுவனின் உடல் தேடப்பட்டது.

டிரோன் கேமிராக்களை கொண்டு வரப்பட்டு சிறுவனின் உடல் பல இடங்களில் தேடப்பட்டது. இந்நிலையில், சிறுவன் ஷாம் ரோஷனின் உடல் இன்று ஸ்கூபா டைவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டது. சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறுவன் எப்படியாவது உயிருடன் வருவான் என எதிர்பார்த்து காத்திருந்த பெற்றோர், மகனின் சடலத்தை கண்டு கதறியழுதனர்.

எச்சரிக்கை பலகையை மீறும் நபர்களால் சோகம்: