மார்ச் 28, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் உள்ள புலிகள் காப்பகத்தில் பத்து வனச்சரகங்கள் இருக்கின்றன. இவற்றுள் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை என அனைத்து வன விலங்குகளும் இந்த வனச்சரகங்களில் உள்ளன. வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் யானைகள் தண்ணீரை தேடி அலைகின்றன. இதன்காரணமாக, வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் அருகே உள்ள கிராமப்புறங்களுக்குள் வருகிறது. Fire Accident In Biscuit Factory: பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கரமான தீ விபத்து..!
இவ்வாறு அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், யானைகள் சாலைகளில் உலா வருகின்றன. அதில் வரக்கூடிய வாகனங்களை மறித்து உணவைத் தேடி அலைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருக்கின்ற தலமலையில் இருந்து தாளவாடிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. முதியனூர்-நெய்தாலபுரம் கிராமங்கள் அருகே உள்ள வனப்பகுதி சாலையில் பேருந்து செல்லும் போது, திடீரென்று காட்டு யானை ஒன்று அரசு பேருந்தின் முன்பாக வந்து துரத்தியது.
யானை துரத்தியதால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி ஓட்டினார். காட்டு யானை சிறிது நேரம் துரத்தியது. பின்பு, வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால் கொஞ்ச நேரம், பேருந்தில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர். பின்னர். அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓட்டிச்சென்றார்.