மார்ச் 28, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் அருகே உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் ராஜேந்திரன் நகரில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு (Fire Service Department) தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். Masala Buttermilk: தாகம் தணிக்கும் மசாலா மோர் – கோடை கால ஸ்பெஷல்..!
தீயை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, மேற்கொண்டு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மளமளவென எரியும் தீயை அணைக்க போராடி வருகின்றனர். முதல் தளத்தில் தீயானது முழுவதும் பரவியதால், அந்த சுவர் எந்த நிலையிலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனரா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகையினால், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கண் எரிச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலகோடி மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்திருக்கலாம் என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும், தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.