ஏப்ரல் 22, உசிலம்பட்டி (Madurai News): மதுரை மாவட்டம், உசிலம்பட்டி (Usilampatti) அருகே உள்ள மானூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யர்சாமி. இவர், அதே கிராமத்தை சேர்ந்த கவினாஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, பக்கத்து வீட்டுக்காரர்களான இருவரது குடும்பத்தினருக்கும், நிலம் சம்மந்தமாக கடந்த 15 ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பொண்டாட்டி கூட சேர்ந்து வாழுப்பா.. அறிவுரை கூறிய பெண் குத்திக்கொலை.. இளைஞர் வெறிச்செயல்.!
காதல் திருமணம்:
இதனால், இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 21) காலை அய்யர்சாமி - கவினாஸ்ரீ இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் (Love Marriage) செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்த நிலையில், இரு வீட்டாரையும் அழைத்து பேசி, காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால், அவர்களை அனுப்பி வைத்தனர்
சரமாரி தாக்குதல்:
இதனையடுத்து, காவல்நிலையத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை இருவீட்டாரும் காரிலிருந்து இழுத்து கீழே போட்டு சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, காவல்துறையினர் இரு வீட்டாரையும் காவல்நிலையம் அழைத்து சென்று தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.