ஜூன் 12, புதுடெல்லி (New Delhi): மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வெங்காயம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் வரத்து குறைந்துள்ளதுடன், பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளதால், கடந்த இரண்டு வாரங்களில் வெங்காய விலை 30-50% வரை உயர்ந்துள்ளது. மே 25ம் தேதி வெங்காயம் ரூ.17-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது மொத்த விலை விற்பனை விலை, ரீடைல் சந்தையில் வெங்காயம் விலை (Onion Price) 50 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்படுகிறது. விலை உயர்வு சாமானிய மக்களைப் பாதிக்கும் என்பதால், மத்திய அரசு விரைவில் தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நுகர்வோர் வலியுறுத்துகின்றனர். Bird Flu in India: இந்தியாவில் 4 வயது சிறுமிக்கு எச்9 என்2 பறவைக்காய்ச்சல் பரவியது உறுதி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!
கோயம்பேடு மார்க்கெட்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக தினசரி 45 லாரிகளில் வெங்காயம் வரும். ஆனால் கடந்த சில நாட்களாக 30 லாரிகளாக குறைந்து விட்டது. இதனால், தற்போது விலை அதிகரித்து கிலோ ரூ.42 என விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சூப்பர் மார்க்கெட் கடைகளில் 1 கிலோ வெங்காயம் ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது.