ஜூலை 25, திருவள்ளூர் (Thiruvallur News): திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, ஆரப்பாக்கம் பகுதியில் 8 வயதுடைய சிறுமி அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இதனிடையே சம்பவ நாளன்று, சிறுமி பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, மர்ம நபர் ஒருவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார். இதில், பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறினார். வானிலை: இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கனமழை.. 10 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ..!
குற்றவாளி கைது:
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதன்பின்னர், 7 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணையும் நடைபெற்றது. தொடர்ந்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில், 14 நாட்களுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3