ஜூலை 24, கோயம்புத்தூர் (Coimbatore News): கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ தர்சன் (வயது 22). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் இலக்கியம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். பி.கே. புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக தங்கி, அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். கல்லூரியில் படித்து வந்த 19 வயது மாணவியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் காதலிப்பதாக கூறி, மாணவியை தான் தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருடன் பாலியல் (Sexual Harassment) ரீதியான உறவில் ஈடுபட்டுள்ளார்.
காதல் வலையில் சிக்க வைத்து பாலியல் பலாத்காரம்:
இதனையடுத்து, சில மாதங்களில் ஸ்ரீதர்சன் 21 வயதான மற்றொரு கல்லூரி மாணவியுடன் நெருங்கி பழகிய வந்துள்ளார். அவரையும் தான் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளார். பின்னர், இந்த 2 மாணவிகளையும் ஒதுக்கிவிட்டு மறுபடியும் வேறொரு மாணவியை காதலிப்பதாக கூறி பழகியுள்ளார். அந்த மாணவியை பாலியல் உறவுக்கு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் யாருமில்லாத இடத்திற்கு தனியாக வர மாட்டேன் என கூறி மறுத்துள்ளார். LKK Vs SMP Highlights: கோவை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி; மதுரை அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்..!
கல்லூரி மாணவர் கைது:
இந்நிலையில், ஏற்கனவே அவரை காதலித்த மாணவிகளுக்கு ஸ்ரீ தர்சனின் உண்மை முகம் தெரியவர அவரிடம் இருந்து ஒதுங்கி சென்றுள்ளனர். ஆனால், ஸ்ரீ தர்சன் அவர்களை மீண்டும் பாலியல் உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். அவர்கள் இதற்கு மறுத்தபோது, பொது இடத்தில் ஆபாசமான வார்த்தைகளில் திட்டி, பாலியல் உறவில் இருந்த போட்டோ, வீடியோக்களை அனைவருக்கும் அனுப்பி விடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார். இச்சம்பவம் பற்றிய தகவல், கல்லூரி வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 2 மாணவிகள் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் ஸ்ரீ தர்சன் மீது பாலியல் துன்புறுத்தல், தகாத முறையில் பேசுதல், மிரட்டுதல், வன்முறை செய்யும் வகையில் எச்சரித்தல் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்ட பிரிவின் படி வழக்குப்பதிவு செய்து அவரை கடந்த ஜூலை 21-ஆம் தேதி அன்று கைது செய்தனர்.
காவல்துறையினர் அதிர்ச்சி:
இதனையடுத்து, ஸ்ரீ தர்சன் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான ஆணுறைகள் கிடந்துள்ளன. இவர், 20-க்கும் மேற்பட்ட மாணவிகளை (20 Women Were Raped In Coimbatore) இப்படி பழகி ஏமாற்றியிருக்கலாம் என கூறப்படுகின்றது. மேலும், ஸ்ரீ தர்சனின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான ஆபாச போட்டோ, வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. இவரின் செல்போன் பதிவு, ஏமாந்த மாணவிகளின் விவரங்களை அறிந்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து, கல்லூரி மாணவிகள் காதல் வலையில் ஏமாற்றும் நபர்களிடம் இருந்து உஷாராக இருக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.