LKK Vs SMP Highlights (Photo Credit: @TNPremierLeague X)

ஜூலை 24, திருநெல்வேலி (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2024) இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று நடைபெற்ற 22-வது லீக் போட்டியில் கோவை கிங்ஸ்-மதுரை பாந்தஸ் (LKK Vs SMP) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் களமிறங்கிய கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுரேஷ் குமார் 16 ரன்களிலும், சுஜய் 15 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய முகிலேஷ் 21 ரன்களிலும், ராம் அரவிந்த் 8 ரன்னிகளிலும், சாய் சுதர்சன் 34 ரன்களிலும் வெளியேறினர். 25-Year-Old Pregnant Woman Died: கருக்கலைப்பில் உயிரிழந்த 25 வயது இளம்பெண்; கள்ளக்காதலியின் குழந்தைகளை கொன்ற கள்ளக்காதலன்; நெஞ்சை நடுங்கவைக்கும் துயரம்.!

அதிரடியாக ஆடிய கேப்டன் ஷாருக்கான் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 163 ரன்கள் எடுத்தது. மதுரை அணியில் அதிகபட்சமாக அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டும், மிதுன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர், 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய மதுரை அணிக்கு பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

மதுரை அணி தரப்பில் அதிகபட்சமாக கார்த்திக் மணிகண்டன் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் மதுரை அணி 120 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. கோவை அணி தரப்பில் கவுதம் தாமரைக் கண்ணன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கோவை அணி 10 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ஷாருக் கான் பெற்று சென்றார்.