அக்டோபர் 28, சென்னை (Chennai News): வானிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது மற்றும் வளிமண்டல காற்றின் சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இன்றைய வானிலை (Today Weather):
தென்னிந்திய கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. TVK Maanadu: தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு; கொள்கை, கோட்பாடு, விஜய் பேச்சு.. முழு விபரம் உள்ளே.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.