அக்டோபர் 27, விக்கிரவாண்டி (Viluppuram News): 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு, தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) கட்சியை தோற்றுவித்துள்ள நடிகர் விஜய் (TVK Vijay), தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றி அரசியலில் களமிறங்கி இருக்கிறார். அக்.27ம் தேதியான இன்று மாலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவாண்டியில் (TVK Maanadu) மாநில கொள்கை திருவிழா மாநாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த மாநாடு, மாலை 4 மணிக்கு மேல் தொடங்கியது. மாநாட்டுக்கு திரைத்துறையினரும் வரவேற்பு அளித்துள்ள நிலையில், பலரும் நேரில் வந்துள்ளனர். நடிகர் விஜயின் பெற்றோர் சந்திர சேகர் - ஷோபனாவும் மாநாட்டு திடலுக்கு வந்துள்ளனர்.
பிழையின்றி பாடப்பட்ட தமிழ்த்தாய் (Tamil Thaai Vaalthu) வாழ்த்து:
ஆதி தமிழர்களின் இசையான பறையிசையுடன் தொடங்கி, தேவராட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய மாநாடு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் மறைந்த மாமன்னர்கள், சுதந்திர வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழகத்தின் முடித்த தலைவர்கள் பலருக்கும் முதலில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கட்சிக்கொடி 101 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்டது. பிழையின்றி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அரசியல் வழிகாட்டிகள்:
அதனைத்தொடர்ந்து, மொழிப்போர் தியாகிகளின் இலக்கை எட்ட பாடுபடுவேன், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை, வீரத்தை எப்போதும் போற்றுவேன், தமிழ் மண்ணில் வீரத்துடன் போராடி உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றுவேன், சாதி, மத இந வேறுபாடுகள் இல்லாமல் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டு, கொள்கை பாடல் வெளியீடு செய்யப்பட்டது. பின் பெரியார், அம்பேத்கர், வேலு நாச்சியார், காமராஜர், அஞ்சலை அம்மாள் ஆகியோர் அரசியல் வழிகாட்டி என பிரகடனப்படுத்தப்பட்டது. மதசார்பற்ற சமூகநீதிக் கொள்கையில் பெரியாரின் வழியில் பயணிப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. Railway Station Stampede: ஒரே நேரத்தில் இரயிலில் பயணிக்க முடியடித்த கூட்டம்; கூட்ட நெரிசலால் 9 பேர் படுகாயம்.!
கட்சியின் கொள்கை:
1. தவெக-வின் கொள்கையை பொறுத்தமட்டில், பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்பதன் பேரில், மக்கள் யாவரும் பிறப்பால் சமம், பாரபட்சமற்ற சமநிலை உருவாக்குதல்.
2. மதம், சாதி, நிறம், மொழி, பாலின அடையாள, பொருளாதார அடையாளம் போன்றவற்றில் மனிதர்களை சுருக்கமால், எல்லாருக்கும் எல்லாம் என சமநிலை சமூகம் குறிக்கோள்.
3. மதசார்பற்ற சமூக நீதிக்கொள்கையில், ஜனநாயகம் ஒருநாட்டின் மக்களை, அவர்கள் சார்ந்த இனம், மதம், சாதி, பாலினம் என் பிரிக்காமல் சமநிலை வழங்குவதை உறுதி செய்தல், ஆட்சி அதிகாரம், நீதி, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ஜனமக்களின் அதிகாரத்தை பறிக்கும் நபர்களை எதிர்த்து ஜனநாயக உரிமையை நிலைநாட்டுதல்.
4. விகிதச்சார இட ஒதுக்கீடு வழியில் சாதி ஒழிக்கப்படும் வரை சமதர்ம சமூகநீதி வழங்கப்படும்.
5. சமத்துவம், சாதி, மதம், இனம், பொருளாதாரம், வர்க்கம், பாலின சமூகத்திற்கு உரிமை வழங்கி, எல்லா நிலையிலும் ஆண்களுக்கு நிகர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் சமத்துவம் ஏற்படுத்துதல்.
6. மதச்சார்பின்மையில், மதச்சார்பற்ற முறையில், தனிப்பட்ட மத நம்பிக்கையில் தலையீடற்ற நிலை, மத நம்பிக்கை அற்றவரையும் சமத்துவமாக மதிப்பு வழங்குதல்.
7. மாநில தன்னாட்சியில், மாநில தன்னாட்சி உரிமை மக்களின் தலையாய உரிமை என்பதால், மாநில உரிமையை மீட்பது முக்கிய கொள்கை.
8. இருமொழிக் கொள்கை என்பதில் உறுதியாக, தாய்மொழி தமிழ் மற்றும் உலக இணைப்புமொழி ஆங்கிலம். தமிழே ஆட்சி, வழக்காடு, பரிமாற்று மொழி, தமிழ்மொழி கல்விக்கு அரசு வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்குதல்.
9. அரசியல் தலையீடு இல்லாத அடிப்படை உரிமை வழங்குதல், அரசு & தனியார் நிறுவனங்களில் அதிகாரம் தலையீடு இல்லாத நிலையை உருவாக்குதல்.
10. கல்வி, சுகாதார, தூய சுகாதாரம், குடிநீர் காற்று, சுற்றுசூழல் பாதுகாப்பு ஏற்படுத்துதல்.
11. பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மையில், பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பது, தீண்டாமை ஒழிப்பு, பழமைவாத ஒழிப்பு செயல்களை ஊக்குவித்தல்.
12. இயற்கை வளம் மீட்பு, சூழலியல் பாதுகாப்பு.
13. போதையில்லாத தமிழகம், உடல், மனம் கெடுக்கும் போதை அறவே இல்லாத தமிழகம் படைத்தல். Vijay Sethupathi Angry: போட்டியாளர்களை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி; சவுண்டுக்கு சவுண்டாக வைத்த ஆப்பு.!
தவெகவின் செயல்திட்டம்:
1. நிர்வாக சீர்திருத்தம்: அரசு & தனியார் துறைகளில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்பதை நிலைநிறுத்த, இலஞ்சம் இல்லாமை வழிவகை.
2. சாதி-மத-பாலின சார்பின்மை வழிகாட்டும் வழிமுறை கடைபிடிப்பு.
3. அரசு நிர்வாகம் முற்போக்கு சிந்தனை, அரசியல் சார்ந்ததாகவும், பன்முகத்தன்மையுடன் விளங்கும்.
4. சட்டப்பேரவை உறுப்பினர்கள் & அமைச்சர்களுக்கான நடத்தை விதிகள் உருவாக்கப்படும்.
5. அரசை மக்கள் எளிதில் அணுகும் வகையில், உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டதுபோல, தலைமை செயலக கிளை மதுரையில் அமைக்கப்படும்.
6. சமூகநீதி, மதசார்பின்மை கோட்பாடு செயல்படுத்தப்படும்.
7. சமதர்மத்தை எதிர்க்கும் கோட்பாடு, வருணாசிரம கோட்பாடு எதிர்ப்பு.
8. சாதிவாரி கணக்கெடுப்பு வாயிலாக அனைவர்க்கும் சமமம விகிதாச்சார இடப்பங்கீடு.
9. ஜாதி, மத, மொழி சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் பட்டியலின மக்களுக்கு முன்னேற்றம்.
10. மொழிக்கொள்கையில் தமிழ், ஆங்கிலம் இருமொழிக்கொள்கை மட்டும்.
11. நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
12. தமிழ்வழிக்கல்வி, தமிழ்வழி ஆராய்ச்சிக்கல்வி உறுதி செய்யப்படும்.
13. கீழடியை சுற்றியுள்ள பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழந்தமிழரின் வாழ்வியல் முறைகள் வெளிக்கொணர நடவடிக்கை எடுக்கப்படும்.
14. மாநில தன்னாட்சி உரிமை, மருத்துவம் போல, கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்ற அழுத்தம் கொடுக்கப்படும்.
15. எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலத்தில், மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிக்கிறது. இது ஆளுநர் பொறுப்பு தேவையா? என கேள்வி எழுப்பும் நிலையில், ஆளுநர் பதவி அகற்ற வலியுறுத்தப்படும்.
16. மகளிர் நலன் முறையில், 3ல் ஒரு பங்கு கட்சிப்பதவி, தேர்தல் வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்படும், படிப்படியாக 50 % நிலை எட்டப்படும்.
17. அனைத்து துறையிலும் ஆண் - பெண் சமஉரிமை வழங்கப்படும், பெண்கள், குழந்தை, முதியவர்கள் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்கப்படும்.
18. மாவட்டம்தோறும் மகளிருக்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்படும்.
19. மனிதகுல அழிவுக்கு வழிவகை செய்யும் அறிவியல் சாரா சிந்தனைகள் முற்றாக நிராகரிக்கப்படும், தீண்டாமை குற்றம் நீக்க, தீண்டாமை கடைபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
20. ஒவ்வொரு மாவட்டத்தில் காமராஜர் நவீன அரசுப்பள்ளி அமைக்கப்படும்.
21. உயர்கல்வி & ஆராய்ச்சிக்கல்வி தரம் உயர்த்தப்படும், தகவல் தொழிநுட்ப துறைக்கென அரசு பல்கலை., உருவாக்கம்.
22. மாவட்ட அளவில் அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வழிவகை செய்யப்படும்.
23. ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும்.
24. புற்றுநோய் போன்ற தீவிர நோய்க்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
25. விவசாயிகளின் விற்பனை விலை & நுகர்வோர் வாங்கும் விலை இடையே உள்ள இடைவெளி குறைக்க, அறிவியல் பூர்வமான திட்டம் உருவாக்கப்படும்.
26. நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்படும் & ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவசாய நிலங்கள் மீட்டெடுப்பு செய்யப்படும்.
27. அதிக கொள்ளளவு கொண்ட நீர்நிலைகள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும்.
28. பனைத்தொழில் மேம்படுத்தும்.
29. ஆவின் பாலகத்தில் கருப்பட்டி பால் வழங்கப்படும்.
30. பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும்.
31. நெசவாளர்களின் நிலைய உயர்த்த அரசு ஊழியர்கள் வாரம் 2 முறை கைத்தறி ஆடை உடுத்த உத்தரவிடப்படும். மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் சீருடை நேரடியாக அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும்.
32. மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்பட, அரசு உணவகத்தில் மண்பாண்ட பொருட்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
33. சுற்றுசூழல் பாதுகாப்பு விஷயத்தில், தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, நீர் கொள்ளையை பாதுகாக்க சிறப்பு சட்டம் உருவாக்கப்படும்.
34. மக்கள் தொகையை குறைக்க, பிற பகுதிகள் வளர்ச்சியடைய, மண்டல வாரியாக துணை நகரங்கள் அமைக்கப்படும்.
35. தொழிற்சாலை உரிய விதியை பின்பற்றுதலையும், கழிவுகள் அனுமதிக்கப்பட்ட அளவு வெளியேற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தீவிரப்படுத்தப்படும். மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சீரமைக்கப்படும், தற்போதைய வாரியம் செயல்படாமல் இருக்கிறது.
36. வனப்பரப்பு அதிகரிக்கப்படும்.
37. போதைப்பொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும். IND Vs NZ: வெற்றிக்கோப்பையுடன் தோனி.. 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த சுவாரசியம்.. மறக்க முடியுமா?..
அதனைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வீரவாள் பரிசு வழங்கப்பட்டது. பின் விஜய் தனது பேச்சை தொடங்கும் முன்னர் விஐபி பிரிவில் இருந்த அப்பா - அம்மாவிடம் ஆசி வாங்கிவிட்டு பின் தனது பேச்சை தொடங்கினார். விஜய் பேசுகையில்,
குழந்தையும் பாம்பும்:
ஒரு குழந்தை முதல் முதலாக அம்மா என சொல்லும்போது, அம்மாவுக்கு வரும் சிலிர்ப்பு.. அந்த சிலிர்ப்பு எப்படி என கேட்டால் அவரால் சொல்ல முடியும். அந்த உணர்வை கேட்டால் குழந்தைக்கு சொல்ல தெரியுமா? குழந்தைக்கு எதனை கேட்டாலும் பால் வாசம் மாறாமல் வெள்ளந்தியாக சிரிக்கத் தெரியும். அந்த குழந்தை அனுபவித்த மகிழ்ச்சி சூழலை சொல்ல தெரியாது. அப்படியான உணர்வுடன் உங்களின் முன்பு நான் நிற்கிறேன். அதே நேரத்தில் அம்மாகிட்ட சொல்லத்தெரியாத உணர்வை ஒரு பாம்பு வந்து படமெடுத்தால், என்ன நடக்கும்? யார் முன்னாலும் பாம்பு வந்தாலும், அலறியடித்து ஓடுவார்கள்.. பாம்பைக்கண்டால் படையே நடுங்கும் என கூறுவார்கள். குழந்தை பாம்பை கண்டால் அம்மாவை பார்த்து சிரிப்பதுபோல, சிறிது விளையாடும். அப்போது அந்த குழந்தைக்கு பாம்பை கண்டால் பயம் எப்படி சொல்லத்தெரியும்?.. பாசத்தை சொல்லத்தெரியாது பயத்தை மட்டும் எப்படி சொல்லும்?. இந்த பாம்பு தான் அரசியல். அதனைக்கையில் பிடித்து விளையாட ஆரம்பிப்பதுதான் உங்களின் நான்.. அரசியலுக்கு நாம் குழந்தை தான். பாம்பு இருந்தாலும் பயம் இல்லை என்பதே எங்களின் தன்மைபிக்கை. அரசியல் சினிமா இல்லை, கொஞ்சம் சீரியசாக தான் இருக்கும். பாம்போ, அரசியலோ கையில் எடுத்ததும் சீரியசாக செயல்படுவதே நமது இயல்பு. அப்படி இறங்கினால் தான் எதிராளிகளிகளை வீழ்த்த முடியும். கவனமாக இங்கு களமாட வேண்டும்.
அறிவியலை போல அரசியல் மாறக்கூடாதா?
நமது கட்சியின் முதல் மாநாடு, அவர்களே எதற்கு? பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என கொள்கையை அறிவித்துவிட்டு, யாரையும் பிரித்து பார்க்க வேண்டாம். இனி நான் நீ, நாங்கள் வேண்டாம். நாம என்பதுதான். இங்க யாரு மேல, கீழ பாகுபாடு வேண்டாம். எல்லாம் சமம்தான். என் நெஞ்சில் குடியிருக்கும் ஒட்டுமொத்தமான உங்கள் எல்லாருக்கும், என்னுடைய உயிர் வணக்கங்கள். இதுவரை ஆடியோ வெளியீடு மேடையில் சந்தித்தோம், இப்போது அரசியல். அரசியலில் கோபமாக கொந்தளித்தால் தான் மேடை என இருந்தது. அதனால் கோவமாக கொந்தளிப்பதை விட்டுவிட்டு, நேரடியாக பேச வந்துவிடலாம். அறிவியல் மாறணுமா? அரசியல் மட்டும் மாறக்கூடாதா? அரசியலும் மாற வேண்டும். இல்லையென்றால் இந்த புத்தியால் உலகம் மாற்றிவிடும். இங்கு வேலை, உழைப்பு, பசி தான் மாறாதது. இன்றுள்ள இளைஞர்களை புரிந்துகொண்டதால் எளிமையாயக பேசுகிறோம். புள்ளிவிபர புலியாக நான் பேசவில்லை, ஏற்கனவே அரசியலில் இருக்கும் நபர்களை பேசி நேர விரயம் செய்யப்போவதில்லை, அதற்காக கண்ணை மூடி இருக்கப்போவதில்லை. இப்போதைக்கு தேவை, தீர்த்துவைப்பது என்பதை மட்டும் யோசித்தால் போதும். இதனை கூறினாலே மக்களுக்கு நம்பிக்கை வரும். அரசியலில் நம்பிக்கை தருவது கொள்கை, கோட்பாடு தான். அதனை மக்களிடம் சொல்வது கடமை.
கொள்கை தலைவர்கள்:
இந்த மாநில மண்ணுக்காக வாழ்ந்து, மண்ணுக்கு அங்கீகாரம் வாங்கித்தந்த பகுத்தறிவு புரட்சியாளர் பெரியார். பெரியார் உங்க கொள்கை தலைவரா? என பெயிண்ட் டப்பாவுடன் கும்பல் ஒன்று வந்துவிடும். பெயிண்ட் டப்பா பிசினஸ்-க்கு அப்புறம் வருகிறேன். அவர் தான் எங்களின் கொள்கைத் தலைவர். பெரியார் கடவுள் மறுப்பு கொள்கை மட்டும் கையில் எடுக்கப்போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. யாரின் கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிராளிகள் இல்லை. அரசியலில் அண்ணன்-தம்பி உறவை அறிமுகப்படுத்திய அண்ணா போல, ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்களின் நிலைப்பாடும். பெண்கள்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூகநீதிக்கு, சமூக சீர்திருத்தம் என பெரியார் கூறியதை நாங்கள் முன்னெடுப்போம். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மதசார்பின்மை, நேர்மையான நிர்வாகத்திற்க்கு முன்னுரிமை என்பதால் அவரும் வழிகாட்டி. அண்ணல் அம்பேத்கர் பெயரைக்கேட்டால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துபவர்கள், நடுங்கிப்போவார்கள். வகுப்புவாதி பிரதிநிதித்துவ, சாதிய ஏற்றத்தாழ்வுகளை களைய போராடியவர் எங்களின் வழிகாட்டி. பெண்களை கொள்கைத்தலைவராக நாம் ஏற்றோம். பெண்களை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள முதல் தமிழக கட்சி தமிழக வெற்றிக் கழகம் மட்டும்தான். பேரரசி வேலுநாச்சியார் சொந்த வாழ்க்கையோட சோகத்தை மறைந்து, மண்ணுக்காக வாளேந்திய வீர புரட்சியாளர். இன்னொருவர் முன்னேற துடிக்கும் சமூகத்தில் பிறந்து, அதனுடைய முன்னேற்றத்திற்கு போராடிய அஞ்சலை அம்மாள். சுதந்திரத்திற்காக போராடிய புரட்சிப்பெண்மணி, இவர்களை பின்பற்றுவதே நமது மதசார்பின்மை. வானிலை: அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன? - சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மனதில் ஏற்பட்ட கேள்விக்கு விடை:
நமது கொள்கை கோட்பாடு ஆகியவற்றை பார்த்து விவேகமானவர்கள் என சொல்ல வேண்டும். சொல் அல்ல செயல் முக்கியம். நமது அரசியல் போரில் சமரசம், சண்டை நிறுத்தத்திற்கு நேரம் இல்லை. வெறுப்பு அரசியலுக்கு விருப்பம் இல்லை. எதற்காக அரசியலுக்கு வந்தோமோ அதற்காக படுபோடுவோம். அரசியல் வேண்டாம், சினிமா போதும் என நினைத்தேன். நாம் மட்டும் நலமாக இருப்பது சுயநலம். நம்மை வாழவைத்த மக்களுக்கு நல்லது செய்யாமல் இருப்பது விசுவாசமாக இருக்குமா?. வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு என்ன செய்யப்போறோம்? என் மனதில் ஏற்பட்ட கேள்விக்கு கிடைத்த விடையே அரசியல்.
கதறல் சத்தமும், பிளவுவாத அரசியலும்:
அரசியலில் நம்மால் முடியுமா? என யோசிக்கும்போது கேள்வி வந்தது. கேள்வியே வந்தால், என்ன செய்வது என யோசிக்கும்போது, இறங்கி செயல்பட்டு மக்களுக்காக உழைப்போம், பின்விளைவை யோசிக்க வேண்டாம் என இறங்கிவிட்டோம். எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். நமது பலத்தை செயலில் காண்பிக்க வேண்டும்.நமது களத்தில் வெற்றியை தீர்மானிப்பது எதிராளிகள். திருவள்ளுவரின் கூற்றை கூறியபோதே கதறல் சத்தம் கேட்க தொடங்கிவிட்டது, இனி அது அதிகரிக்கும். பிளவுவாத அரசியல் சித்தாந்தம் மட்டுமல்லாது, ஊழல் மலிந்த அரசியலையும் எதிர்க்க வேண்டும். பிளவுவாத அரசியல் மதம்பிடித்த யானை போல. அதனைக்கூட கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இலஞ்சம் கொள்கை நாடகம், கலாச்சார வேஷம் போடும், ஊழல் கபடதாரிகளும் நமக்கு எதிரி. நமது மக்களுக்கு சரியாக தெரியும். இது மதசார்பின்மை பேசும் தமிழக மண். இங்கு இந்து, முஸ்லீம், கிறிஸ்டின் என அனைவரும் சமமாக இருக்கிறோம். அவர்கள் அனைவரும் தமிழராக ஒன்றுகூடி யோசித்து செய்யப்படுவார்கள்.
முடிவோடு அரசியலுக்கு வந்துள்ளேன்:
சாதி சமூகநீதிக்கான மண்ணாக, மகத்தான அரசியல் என்பது மக்களுக்கான அரசியல். மக்களுடன் மக்களுக்காக, அவர்களுக்காக இதே குணத்துடன் நிற்பதே அரசியல். நல்ல திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அது மக்களுக்கு சென்றதா? என கவனிக்க வேண்டும். சோறு சாப்பிட்டால்தான் பசி ஆறும். அனைவரையும் நாம் வாழ வைப்போம். எங்களின் அரசியல் கொள்கை நிலைப்பாடு எதார்த்தமாக இருக்கும். மாற்று அரசியல் என 10-டன் 11 ஆக கூடுதல் லக்கேஜாக நான் இங்கு வரவில்லை. நமது நாட்டுக்கு கேடு செய்யும், ஏமாற்று சக்தியின் பிடியை மாற்றும் உங்களின் அண்ணனாக, தம்பியாக உழைக்க வேண்டும் என்பதே.. ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறேன். பின்னால் செல்ல வாய்ப்பே இல்லை. இந்த முடிவு நாங்கள் எடுத்த முடிவு. சோசியல்மீடியவில் கம்பு சுத்த வந்த கூட்டம் இல்லை. TVK Maanadu: பல்லாயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்; மேடைக்கு வருகிறார் தவெக தலைவர் விஜய்.!
ஒவ்வொரு ஓட்டம் அணுகுண்டாகும்:
அதனால் மீடியா ட்ரோல், சோசியல் மீடியா ட்ரோல், ஆபாசம், அல்லு சில்லு, அவதூறு பரப்புறது, பயோஸ்க்கோப் காற்றது, ஏ-டீஎம் பீ-டீம் என இந்த படையை வீழ்த்திவிடலாம் என நினைக்க வேண்டாம். நமது சொந்தம் உறவு தமிழகம் முழுவதும் உள்ளது. உலகம் முழுவதும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு குடும்பமாக இருக்கிறார்கள். இதுதான் நமது வகையறா. இங்கு யாரவது வந்து நல்லது செய்திடமாட்டார்களா? என ஏக்கம் கொள்கிறார்கள். எதிரிகளை சந்திப்பது வெகுதூரத்தில் இல்லை. 2026 தேர்தலில் ஒட்டுமொத்த மக்களும் தவெக சின்னத்திற்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் அணுகுண்டாக மாறும். அவர்களுக்கான குரலாக அது இருக்கும்.
திராவிட மாடலை மாயை - விஜய் கடும் சாடல்:
இங்க ஒரு கூட்டம் கொஞ்ச காலமாக ஒரே பாட்டை பாடிகிட்டு, யார் அரசியலுக்கு வந்தாலும், அவர்களின் மீது குறிப்பிட்ட கலரை பூசிவிட்டு, பூச்சாண்டி காண்பித்து, மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், இவர்கள் மட்டும் அடிமட்ட டீலிங் போட்டு, தேர்தலை நேரத்தில் பாசிசம் என பூச்சாண்டி காண்பித்து, பாசிசம் என வேடிக்கை காண்பிக்கிறார்கள். மக்கள் ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்கிறார்கள். நீங்கள் என்னதான் மோடி மஸ்தான் வேலையை செய்தாலும், ஒன்றும் செய்ய முடியாது. நாட்டை பிளவுபடுத்தும் அரசியல் செய்பவர்களே தவெகவின் முதல் எதிரி. திராவிட மாடல் என சுற்றி வருபவர்களே அடுத்த எதிரி. கொள்கைக்கோட்பாடு அளவில் திராவிடமும்-தமிழ் தேசியமும் ஒன்றே எனினும், கொள்ளை செயலுக்கு நாங்கள் எதிரி. சகோதரத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு, பெண்கல்வி, மாநில தன்னாட்சி, இருமொழி, காலநிலை மாற்ற வளர்ச்சி, உற்பத்தி திறன், போதை இல்லா தமிழகம் என கொள்கை அடிப்படையில், பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் சமதர்மத்தை உருவாக்குவதே நமது கொள்கை. எங்களின் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது பெண்கள். எனது அம்மாக்கள், அக்கா- தங்கைகள், நண்பிகள். என்கூட பிறந்த தங்கை திவ்யா இறந்தது பெரிய பாதிப்பை உண்டாக்கியது. அதேபோல, தங்கை அனிதாவின் மரணம் இறந்தது. தகுதி இருந்தும் தடை ஏற்படுத்தும் நீட். இனிமே நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். அன்றே நான் முடிவெடுத்துவிட்டேன். இன்று நான் களத்திற்கு வந்துவிட்டேன். உங்களின் ஒருவனாக, உறவாக அனைவருக்குமானவராக இருப்பேன். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும். தனிமனிதனுக்கு வாழ்வதற்கு சோறு, வசிக்க வீடு, நல்ல வேலை முக்கியம். இதை கொடுக்க முடியாத அரசு இருந்தால் என்ன? போனால் என்ன?.
குட்டி கதை:
உனக்கு என்ன தெரியும் என கேட்பவர்களுக்கு குட்டி கதை. ஒருநாட்டில் பெரிய போர் வந்தது. அப்போது நாட்டில் பெரிய தலைமை இல்லாததால், பச்சை குழந்தையிடம் அதிகாரம் இருந்தது. சின்ன பையன் போர்க்களம் போலாம் என கூறியபோது, பெரிய தலைகள் எல்லாம் பச்சை குழந்தையை தடுக்கிறது. அந்த குழந்தை எந்த பதிலும் சொல்லாமல் சென்ற பாண்டிய இளவரசன், இறுதியில்... கெட்டபய அந்த பாண்டியன். இதுவரை கொள்கை கோட்பாடு என விஜயை பார்த்திருப்பீர்கள். என்னை நீங்கள் தளபதி என கூப்பிட்டாலும், கூத்தாடி விஜய் என கூப்பிட்டாலும் பிரச்சனை இல்லை. கூத்து இந்த மண்ணுடன், மக்களுடன் கலந்த ஒன்று. அன்று எம்.ஜி.ஆர், ஆந்திராவில் என்.டி.ஆர் ஆகியோரையும் கூத்தாடி என கூப்பாடு போட்டார்கள். நம்மையும் கூப்பிடாமல் இருப்பார்களா?. இந்த இரண்டு கூத்தாடிகள் தான் மக்கள் மனத்தில், அரசியலில் நீங்காத இடத்துடன் வாழ்கிறார்கள். தமிழரின் வாழ்வியல், கலை, இலக்கியம் தான் சினிமா. திராவிட இயக்கம் வளர்ந்ததே சினிமாவால் தான். கூத்தாடி என்பது கெட்டதா? கூத்து சாதாரண வார்த்தை இல்லை. கொள்கை, கோட்பாடு, நல்லது, உண்மை, அரசியல் உட்பட பலவற்றையும் பேசும். இதனை கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் கொண்டாட்டமாக பேசும். கூத்து கொண்டாட்டம் என்றால், அது குறியீடு. கூத்தாடியின் கோபம் கொந்தளித்தால் கட்டுப்படுத்த முடியாத்து. அவன் நினைத்ததை செய்து முடிப்பவன். அதனாலேயே கூத்தாடிகளை மக்கள் கொண்டாடுகிறார்கள். அன்று கூத்து, இன்று சினிமா அவ்வுளவுதான். தொடக்கத்தில் நாமும் சினிமா வந்தபோது நானும் பல அவமானங்களை கண்டேன். கொஞ்சம் கூட கலங்காமல் வாய்ப்பு, சூழலுக்கு காத்திருந்து உழைத்து மேலே வந்துள்ளேன். அப்போது கூட உழைப்பு மட்டும் தான் என்னுடையது, பிற அனைத்தையும் நீங்கள் கொடுத்தது.
புதியதோர் விதியை புதுமையாக செய்வோம்:
சாதாரண விஜய் நடிகனாக, தொண்டனாக மாறி இன்று உங்களின் முன் இருக்கிறேன். இன்று தொண்டன், நாளை தலைவனாக உங்களுக்காக இருப்பேன். ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மனிதனுக்கும் மாற்றம் வரும். மாறியது நான் எனினும், மாற்றியது நீங்கள் தான். என்னிடம் இருப்பது உண்மை நேர்மை உழைப்பு. இன்று அரசியல் களத்திற்கு அழைத்து வந்துள்ளீர்கள். ஓய்வில்லாமல் உழைப்பேன். அதற்கான தீர்வு உங்களின் கைகளில் இருக்கிறது. எல்லாம் நன்றாக செயல்படும். தேர்தல் அரசியலில் பலரின் வெற்றி-தோல்வியை படித்து, அதனை உந்துதலாக எடுத்து, எனது சினிமா வாய்ப்புகளை உதறிவிட்டு, ஊதியத்தை விட்டுவிட்டு உங்களுக்காக வந்துள்ளேன். உங்களின் விஜயை உங்களை நம்பி வந்துள்ளேன். நம்பி நடப்போம், நம்பிக்கையோட நடப்போம். தமிழக வெற்றிக்கு கழகம், தமிழக அரசியலின் புதிய விசையாகி, புதிய திசையாகி மாறி அரசியல் அழுக்குகளை அடித்துத்துவைத்து நீக்கும். அதனை தீர்மானிக்கட்டும் எங்களின் போக்கும், வாக்கும்.. புதியதோர் விதியை புதுமையாக செய்வோம்..
பெயரைக்கூறி தாக்க அரசியலுக்கு வரவில்லை:
மக்களுடன் மக்களாக நாம் களத்தில் நிற்கும்போது, ஒவ்வொரு வீட்டிலும் அவர்களின் ஆசியுடன், ஆதரவுடன், நம்மை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடைய வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நமது செயல்பாடுகளை நம்பி சிலர் நம்முடன் பயணிக்க வரலாம். நம்முடன் களம்காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கி, அதிகாரப்பகிர்வு வழங்கப்படும். 2026 புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு. நம்பிக்கையுடன் இருங்கள். அரசியலில் யார் பெயரையும் சொல்ல மாட்டிங்கிறான்? இவனுக்கு பயமா? என அரசியல் விஞ்ஞானிகள் கூறலாம். சிலரின் பெயரை சொல்லாமல் விட்டதற்கு ஒரேயொரு காரணம், யாரின் பெயரையும் சொல்லி நாங்கள் தாக்க வரவில்லை. மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து, சுத்தமான அரசியல் செய்யவே நாங்கள் வந்துள்ளோம்.