Tomorrow weather (Photo Credit: LatestLY)

பிப்ரவரி 04, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (4-2-2025) வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

வானிலை (Weather):

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (5-2-2025) வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். Job Alert: பிஎஸ்சி நர்சிங் படித்தவரா நீங்களா? நல்ல சம்பளத்தில் அரேபிய அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை.. விபரம் உள்ளே.!

சென்னை (Chennai Weather) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast Today):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (4-2-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசானது முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.