Saudi Arabia | Nurse (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 04, சென்னை (Chennai News): வெளிநாடுகளில் வேலைக்கு சென்று பணம், தங்களின் வாழ்நாட்களை இழந்து தவித்த மக்களின் நலனுக்காக, வெளிநாடு வேலைகளின் உண்மைத்தன்மை தொடர்பாக ஆராய்ந்து, தகுந்த பாதுகாப்பை அயல்நாட்டிலும் தமிழர்களும் உறுதி செய்ய தமிழக அரசு அயலகத் தமிழர் நலத்துறையை அமைத்து உத்தரவிட்டது. அயலக தமிழர் நலத்துறையின் கீழ் பல வெளிநாடு வாழ் தமிழர்கள் இணைக்கப்பட்டு, வெளிநாடு பணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. இதனிடையே, சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை பார்க்க, இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன் இருக்கும் செவிலியர்கள் வேலைக்கு தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்சி நர்சிங் பயின்றவர்களுக்கு வாய்ப்பு:

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில்‌ பணிபுரிவதற்கு குறைந்தபட்சம்‌ இரண்டு வருட பணி அனுபவத்துடன்‌ பி.எஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண்‌ செவிலியர்கள்‌ தேவைப்படுகிறார்கள்‌. இவர்களுக்கான நேர்காணல்‌ வருகிற 23.02.2025 முதல்‌ 26.02.2025 வரை கொச்சியில்‌ (Kochi) நடைபெறவுள்ளது. மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம்‌, விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின்‌ வேலையளிப்பவரால்‌ வழங்கப்படும்‌ என்றும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. Chennai MTC Bus: ஒரேயொரு ரீல்ஸ்.. வேலை போச்சு.. பணியில் அலட்சியம்., அதிரடி காட்டிய சென்னை எம்டிசி பேருந்து நிர்வாகம்.! 

இணையவழியில் விண்ணப்பிக்க:

இந்நிறுவனம்‌ மூலமாக அளிக்கப்படும்‌ வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள்‌ குறித்த விவரங்கள்‌ இந்நிறுவன https://www.omcmanpower.tn.gov.in/ வலைத்தளத்தில் கண்டு பயனடையுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. மேலும்‌, ஊதியம்‌ மற்றும்‌ பணி பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின்‌ வாயிலாக அறிந்து கொள்ளலாம்‌ 63791 79200, 044-22505886 மற்றும் 044-22502267. மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும்‌ விருப்பமும்‌ உள்ளவர்கள்‌ https://www.omcmanpower.tn.gov.in/ என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்‌ வலைதளத்தில்‌ தவறாமல்‌ பதிவுசெய்துகொண்டு தங்களின்‌ சுய விவர விண்ணப்பப்படிவம்‌, கல்விச்சான்றிதழ்‌ பாஸ்போட்‌, அனுபவச்சான்றிதழ்‌ ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற இந்நிறுவனத்தின்‌ மின்னஞ்சலுக்கு 18/02/2025 க்குள்‌ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

இடைத்தரகர் தொல்லை இல்லை:

சிறப்பு தகுதியாக Saudi Professional Classification, HRD Dataflow பணி அனுபவம் பெற்றுள்ள செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌. அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள்‌ நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின்‌ மூலம்‌ பயனடையுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. படிப்பு மற்றும்‌ பணிவிவரங்களின்‌ தகுதியைப்‌ பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும்‌, இந்தப்பணிக்கு தேர்வுபெறும்‌ பணியாளர்களிடமிருந்து சேவைக்‌

கட்டணமாக ரூ.35,400/- மட்டும்‌ வசூலிக்கப்படும்‌ என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்‌.

இணையவழியில் முன்பதிவு செய்ய: https://www.omcmanpower.tn.gov.in/jobInfo.php?jid=452&lang=tm

சவூதி அரேபிய நாட்டில் ரூ.1 இலட்சம் வரை சம்பளம் கொடுக்கும் வேலைவாய்ப்பு: