Road Accident (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 26, ஆரணி (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே துந்தரீகம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மாதம் ஒருமுறை புதுச்சேரியில் (Puducherry) உள்ள பிரித்திரிங்க தேவியம்மன் கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 26) ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியிலிருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் புதுச்சேரி பிரித்திரிங்க தேவியம்மன் கோவிலுக்கு டூரிஸ்ட் வேனில் (Tourist Van) சென்றுள்ளனர். அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் முரளி வேனை ஓட்டியுள்ளார். Fancy Store Fire Accident: பேன்சி ஸ்டோரில் தீ விபத்து.. வேளச்சேரியில் பரபரப்பு சம்பவம்..!

இந்நிலையில், ஆரணி அடுத்த விண்ணமங்கலம் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, திடீரென வேனின் பின் பக்கம் டயர் வெடித்து (Tire Burst) விபத்து ஏற்பட்டது. இதில், பயணம் செய்த அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த நடராஜன்-அமுதவள்ளி தம்பதியினரின் 8 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து, படுகாயமடைந்த 20 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதில், 5 வயது சிறுவனை மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.