Fancy Store Fire Accident: பேன்சி ஸ்டோரில் தீ விபத்து.. வேளச்சேரியில் பரபரப்பு சம்பவம்..!

சென்னையில் பேன்சி ஸ்டோரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் சேதமடைந்தது.

Fancy Store Fire Accident: பேன்சி ஸ்டோரில் தீ விபத்து.. வேளச்சேரியில் பரபரப்பு சம்பவம்..!
Fire Accident (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 26, வேளச்சேரி (Chennai News): சென்னையில் உள்ள வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர் மெயின் சாலையில் ஒரு பேன்சி ஸ்டோர் (Fancy Store) அமைந்துள்ளது. அங்கு இன்று (ஆகஸ்ட் 26) காலை 10 மணியளவில் ஊழியர்கள் வழக்கம் போல கடையை திறந்தனர். கடையின் முதல் தளத்தில் உள்ள ஷட்டரை திறந்தபோது தீ எரிந்து (Fire Accident) கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே, தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். TN Weather Update: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பின்னர், இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் திருவான்மியூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர். தீ பற்றி எரிந்து அதிகளவில் புகை வந்து கொண்டிருந்ததால், தீயை கட்டுப்படுத்துவதில் சற்று சிரமம் நிலவியது.

இதனால், அப்பகுதி பகுதியில் வசிப்பவர்கள் கண் எரிச்சலால் அவதிப்பட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக, வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 26, 2024 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).