Bala Gurusamy (Photo Credit: @Sunnewstamil X)

டிசம்பர் 23, மதுரை (Madurai News): மதுரை மத்திய சிறைஉதவி ஜெயிலர் பாலகுருசாமி. இவர் கைதியின் மனைவி மற்றும் அவரது மகளான சிறுமியிடம் தவறாக நடந்துக் கொண்டதற்காக மதுரை மாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு வந்த பாலகுருசாமி முகத்தில் கைதியின் உறவினரான இளம்பெண் அறைந்தார். இந்த வீடியோவானது இணையம் முழுதும் வைரலானது. இதையடுத்து, அவர் மீது விசாரணை நடந்தது. உதவி ஜெயிலர் பாலகுருசாமி மீது, பெண்களுக்கு எதிரான குற்றம் புரிதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடத்திய மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி, பாலகுருசாமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் பாலகுருசாமியை போலீசார் நேற்று கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

பாலகுருசாமியின் சிலுமிஷங்கள்:

மதுரை மத்திய சிறைக்கு நியமிக்கப்படும் எஸ்பிகளுக்கு ஓட்டுநராக இருந்தவர் பாலகுருசாமி. உயர் அதிகாரிகளுக்கு ஓட்டுநராக இருந்ததால், அவரிடம் முறைத்துக்கொண்டால் உயர் அதிகாரியிடம் கூறி மெமோ கொடுக்கச் செய்து விடுவாராம். இதனாலேயே அவருக்கு பயந்து சிறை காவல் துறையினர் இருந்துள்ளனர். மேலும் சிறைக்கு மனு போட்டு கைதியை பார்க்க வரும் அவர்களது மனைவி, மகள்களிடம் என பல பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இப்படி அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகள் குவியும் நிலையில், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.