TN School Student File Pic (Photo Credit: DTNext)

மார்ச் 19, சென்னை (Chennai): இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான (General Election) அட்டவணையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுப்பதிவு பணிக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக செயல்பட உள்ளன. அதற்காக, ஓட்டுச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும், வரும், 15ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது. SpaceX Falcon 9 Rocket: வானில் திடீரென மர்மமாக தோன்றிய உருவம்; அதிர்ந்துபோன மக்கள்.. நடுவானில் நடந்தது என்ன?..!

இதன் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை ஏப்ரல் 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித் துறை (Department of School Education) திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசித்து, வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை இறுதி செய்ய உள்ளனர். அதேபோல வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4-க்கு பிறகு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.