Balasubramaniam | Murder File Pic (Photo Credit: @mannar_mannan x | Pixabay)

ஜூலை 16, மதுரை (Madurai News): தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பதற்றத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவமே இன்னும் முடியாத நிலையில், நாம் தமிழர் கட்சி துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. World Snake Day 2024: பாம்புகள் பழி தீர்க்குமா? உலக பாம்புகள் தினம்..!

நாம் தமிழர் கட்சி துணை செயலாளர் கொலை: மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (NTK Deputy Secretary Balasubramaniam). இவர் நாம் தமிழர் கட்சியில் மதுரை மாவட்ட வடக்கு தொகுதி துணைச் செயலாளராக இருந்து வந்தார். இவர் அதிகாலையில் நடை பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கம் போல இன்றும் அதிகாலையில் நடை பயிற்சி சென்ற பாலசுப்பிரமணியனை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஓட ஒட விரட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலசுப்ரமணியன் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் காவல் துறையினர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.