World Snake Day (Photo Credit: Pixabay)

ஜூலை 16, புதுடெல்லி (New Delhi): உலக அளவில் ஊர்வன வகையை சேர்ந்த பாம்பு இனங்கள் மூவாயிரம் வகைகள் உள்ளன. நம் இந்தியாவில் மட்டுமே 280 வகை பாம்பினங்கள் உள்ளன. இதில் விஷமுள்ள பாம்புகள், விஷம் இல்லாத பாம்புகள் என இரண்டு வகைகள் உண்டு. கண்ணாடி விரியன், நல்ல பாம்பு, கட்டுவிரியன் மற்றும் சுருட்டை விரியன் போன்றவை விஷமுள்ள பாம்புகள். இவை மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளில் மனிதர்களோடு வாழக்கூடியது. அதைப்போல சாரை பாம்பு, மலைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, ஓநாய் பாம்பு போன்றவை விஷத்தன்மை இல்லாத பாம்புகளாகும். பச்சை பாம்பு, பூனை பாம்பு போன்றவை குறைந்த அளவு விஷத்தன்மை உடைய பாம்புகள் ஆகும். Coimbatore Shocker: கள்ளக்காதலுக்காக கணவரை பலிகொடுத்த மனைவி; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சோகம்..!

பாம்புகள் பழி தீர்க்குமா?: இந்தப் பாம்புகளை குறித்து பல்வேறு வதந்திகள் இந்தியா முழுவதுமே உள்ளது. மகுடி வாசித்தால் பாம்பு மயங்கும், சாரப்பாம்பும் நல்ல பாம்பும் இணைசேரும், பாம்புகள் பழிவாங்கும் இப்படி பல கட்டு கதைகள் தொடர்ந்து நிலவி வருகின்றன. இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளையும் தவறான தகவல்களையும் தகர்க்கவே வருடத்திற்கு ஒரு முறை உலக பாம்புகள் தினம் கொண்டாடப்படுகிறது. பாம்புகள் ஒருபோதும் மனிதர்களை தேடி துரத்தி தாக்குவதில்லை. ஏனென்றால் மனிதர்கள் பாம்புகளுக்கு இயற்கை அல்ல. நாம் பாம்புகளை மிதிக்கும் போது அல்லது அடிக்க முயற்சி செய்யும்போது மட்டும் தான் மனிதர்களை தாக்குகின்றன. மனிதர்களை தாக்கும் அனைத்து பாம்புகளும் நஞ்சு உடையதும் அல்ல.