Chennai HC Lawyer Murder Case (Photo Credit : Youtube)

ஜூலை 28, தாராபுரம் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பேருந்து நிலையம் அருகே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நிகழ்ந்துள்ளது. வழக்கறிஞர் உடையிலேயே முருகானந்தம் பின்னந்தலையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வானிலை: வெயிலா?.. மழையா? அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரம் என்ன?.. விவரம் இதோ.! 

கொலைக்கான காரணம் என்ன?

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தாராபுரம் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த மர்மநபருக்கு வலை வீசப்பட்டுள்ள நிலையில், சொத்து தகராறு காரணமாக கொலை நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.