ஆகஸ்ட் 05, சென்னை (Chennai News): சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அடுத்த ஏழு நாட்களுக்கான நாளைய வானிலை (Tomorrow Weather) முன்னறிவிப்பில், ஆகஸ்ட் 5ம் தேதியான இன்று, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 40 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. TN Weather Update: அடுத்த 2 நாட்களுக்கு கொட்டித்தீர்க்கபோகும் கனமழை; பல மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... விபரம் இதோ.!
காலை 10 மணிவரையில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழை:
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 05) காலை 10 மணிவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்ட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மழைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.