Tomorrow weather (Photo Credit: LatestLY)

ஜூன் 12, நுங்கம்பாக்கம் (Weather News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. வெப்பநிலை நிலவரத்தை பொறுத்தமட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அதிகபட்சமாக ஒரு சில இடங்களில் 2 - 4 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் :

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், வடக்கு ஆந்திர - தெற்கு ஒரிசா பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

இன்று (ஜூன் 12) தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

நாளை (ஜூன் 13) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. Air India Flight AI171: ஏர் இந்திய விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன? குஜராத்தில் சோகம்.! 

ஜூன் 14 ஆம் தேதி மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

ஜூன் 14ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் கன முதல் அதிகனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசியில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 15 ஆம் தேதி மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

ஜூன் 15ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் கன முதல் அதிக கனமழையும், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசியில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 16 ஆம் தேதி மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

ஜூன் 16 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, கோயம்பத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 17 ஆம் தேதி மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

ஜூன் 17ஆம் தேதியை பொறுத்தமட்டில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 18 ஆம் தேதி மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

ஜூன் 18ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று (ஜூன் 12) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (ஜூன் 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

தமிழக கடலோரப் பகுதிகள் :

இன்று (ஜூன் 12) மற்றும் நாளை (ஜூன் 13) தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைவுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிகாற்று வீச வாய்ப்புள்ளது. வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிகாற்று வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள் :

இன்று (ஜூன் 12) ஆந்திர கடலோர பகுதிகள், தெற்கு வங்க கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள் :

இன்று (ஜூன் 12) தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக் கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தெற்கு கொங்கன் - கோவா - கர்நாடகா - கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.