அக்டோபர் 03, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில், மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (03.10.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று 18 மாவட்டங்களில் மழை:
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சராப்பள்ளி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வானிலை: இன்று முதல் அக். 6ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை; மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.. விபரம் உள்ளே.!
தலைநகரில் வானிலை நிலவரம் (Weather Forecast):
சென்னையில் வானிலை நிலவரத்தை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியசும் பதிவாகலாம்.
மீனவர்கள் கவனம்:
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய குமரிக்கடல், வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.