Tomorrow weather (Photo Credit: LatestLY)

அக்டோபர் 14, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில், இன்று (14-10-2024) காலை 05:30 மணி அளவில்‌ தென்கிழக்கு வங்கக்கடலில்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, 08:30 மணி அளவில்‌ அதே பகுதியில்‌ நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில்‌ நகர்ந்து 15 -ஆம்‌ தேதிவாக்கில்‌, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதிகளில்‌ நிலவக்கூடும்‌. இது அதற்கடுத்த இரண்டு தினங்களில்‌, மேற்கு-வடமேற்கு திசையில்‌ நகர்ந்து, வடதமிழகம்‌, புதுவை மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு ஆந்‌திர கடலோரப்‌ பகுதிகளை நோக்கி நகரக்கூடும்‌.

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி நிலவுகிறது. தெற்கு ஆந்ததிர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில்‌ விலகக்கூடிய நிலையில்‌, கிழக்கு மற்றும்‌ வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுஇகளில்‌ வீசும்‌ நிலையில்‌, 16 - 17 ஆம்‌ தேதி வாக்கில்‌, வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில்‌ துவங்கக்கூடும்‌.

இன்றைய வானிலை (Today Weather):

14.10.2024 அன்று தமிழகத்தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. விழுப்புரம்‌, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும்‌ இராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்யவாய்ப்புள்ளது. Chennai Rains: வெளுத்து வாங்கும் பேய் மழை; சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

15.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதி கனமழையும்‌, திருவள்ளூர்‌, இராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்‌சி, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, தஞ்சாவூர்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி பகுஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருச்சிராப்பள்ளி மற்றும்‌ புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்யவாய்ப்புள்ளது.

அக்.12 அன்று அதிக கனமழை எச்சரிக்கை:

16.10.2024 அன்று வடதமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, தென்தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌. திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதி கனமழையும்‌, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ தஞ்சாவூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருச்‌சிராப்பள்ளி மற்றும்‌ புதுக்கோட்டை

மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):

தலைநகர் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான - கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29 செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 செல்‌சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

14.10.2024 மற்றும்‌ 15.10.2024 தேதிகளில் தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்துதிம்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. 14.10.2024 மற்றும்‌ 15.10.2024 ஆகிய தேதிகளில் தெற்கு ஆந்‌திர கடலோரப்பகுதிகள்‌, தெற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ மத்தியமேற்கு மற்றும்‌ அதனை ஓட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல் வானிலை நிலவரம்:

14.10.2024 அன்று மத்தியமேற்கு அரபிக்கடலின்‌ மத்‌திய பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, மத்தியமேற்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல்‌, வடக்கு அரபிக்கடலின்‌ தெற்கு பகுதிகள்‌, தென்மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் மேற்கூறிய நாட்களில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.