அக்டோபர் 20, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகத்துல் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்) மற்றும் புதுவையிலும் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, சென்னை, திருச்சி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், தேனி, நீலகிரி, சிவகங்கை, திருவள்ளூர், சேலம், கோவை, புதுக்கோட்டை, தர்மபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பாளையம்கோட்டையில் 35.1 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.2 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.
சென்னையின், தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரையில், வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்றைய வானிலை (Today Weather):
20.10.2024 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை
மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய வானிலை (Tomorrow Weather):
21.10.2024 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. TVK Vijay: செயல்மொழியே தவெக அரசியலுக்கான தாய்மொழி: மாநாடு குறித்து நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்.. விபரம் உள்ளே.!
15 மாவட்டங்களில் கனமழை:
22.10.2024 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக்.23 அன்று 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு:
23.10.2024 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக்.24 முதல் அக்.26 வரை வானிலை (Weather Forecast Tamilnadu Today) நிலவரம்:
24.10.2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.10.2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.10.2024 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தலைநகர் சென்னையில் வானிலை:
சென்னை (chennai Weather Today) மற்றும் புறநகர் பகுகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
20.10.2024 அன்று அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 21.10.2024 அன்று அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர்
வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்துலும் வீசக்கூடும். 22.10.2024 அன்று மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
அரபிக்கடல் பகுதிகள்:
20.10.2024 இன்று மத்தியகிழக்கு அரபிக்கடல், மத்தியமேற்கு அரபிக்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21.10.2024 அன்று மத்திய அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 22.10.2024 முதல் 24.10.2024 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் / புயலின் நகர்வு, காற்றின் வேகம், மழைக்கான சாதக சூழலை உங்களின் வீட்டில் இருந்தபடி Windy.com-ல் உடனுக்குடன் துல்லியமாக தெரிந்துகொள்ளுங்கள்.