நவம்பர் 30, சென்னை (Chennai News): வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone) இன்று மாமல்லபுரம்-காரைக்கால் இடையே காரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை (Fengal Cyclone Update) விடுத்துள்ளது. ஃபெஞ்சல் புயல், இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும் போது, புயலின் வேகம் படிப்படியாக குறையும் என்றாலும், தரைக்காற்று 90 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, சுமார் 3 மணி நேரம் நிகழும் என கூறப்படுகிறது. Fengal Puyal: ஃபெஞ்சல் புயலின் நிலை என்ன? - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு.!
முதல்வர் ஆய்வு:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (CM M.K. Stalin), மாநில அவசர சிகிச்சை மையத்தில் உயர் அதிகாரிகளுடன் நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏற்கனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளான பகுதி மக்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நீரேற்று நிலையத்தையும் முதல்வர் ஆய்வு செய்தார். இதனையடுத்து, சென்னை பெருநகர காவல்துறையில் கமிஷனர் அருண் நேரடி மேற்பார்வையில் பயிற்சி பெற்ற 39 காவல் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தயார் நிலையில் மீட்பு படையினர்:
அதேபோல், சென்னை பெருநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் வேளச்சேரி, மடிப்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் அமைக்கப்பட்டள்ள சிறப்பு காவல் கட்டுப்பட்டு அறை ஆய்வு செய்து மீட்பு பணிகள் குறித்து காவல்துறையினரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெள்ளம் மீட்பு தொடர்பாக வரும் புகார்களின் படி உடனுக்குடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு தடையின்றி செல்லும் வகையில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.