Cyclone Sign Warning (Photo Credit : Windy.com / @Unmai_Kasakkum X)

அக்டோபர் 21, சென்னை (Chennai News): தமிழகத்துக்கு அதிக மழைபொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதன் அறிகுறிகளாக வங்கக் கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மதியம் வலுப்பெறும். தற்போதைய நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

புயல் உருவாகும் வாய்ப்பு:

இதனால் வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நிலையை தாண்டி மேலும் வலுவடைய கூடும் என்பதால், இது புயலின் அறிகுறியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த பகுதி தாழ்வு மண்டலமான வலுவான பிறகு, மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதால், வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. Gold Rate Today: ரூ.2,080 உயர்ந்தது தங்கம்.. ரூ.1 லட்சத்தை நோக்கி பயணம்.. காலையிலேயே ஷாக்.!

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மழை கொட்டும்:

இதனால் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. தற்போது தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அரபிக்கடலில் உருவான தாழ்வு மண்டலத்தால் தென்தமிழகத்திலும் மழை தொடருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வரும் நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றால், வடமாவட்டங்களில் வரும் நாட்களில் கூடுதல் மழை பெய்யலாம். குறிப்பாக வடகடலோர மாவட்டங்கள், வட தமிழக மாவட்டங்களில் கனமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்த நேரடி விண்டி அப்டேட் (Windy Weather Update):