ஏப்ரல் 04, சென்னை (Chennai News): தமிழக அரசு பள்ளிகளில் (Tamilnadu Government Schools) ஆண்டு விழா நடத்தி, மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட திறன்களை ஊக்குவிக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, தமிழக அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. Palladam Honor Killing Case: கல்லூரி மாணவி ஆணவக் கொலை; விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
சினிமா பாடலுக்கு தடை:
இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பினார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள சோப்பனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், 5 மாணவர்கள் திரைப்பட பாடல்களுக்கு நடமாடினர். அதில், ஒரு மாணவர், வீரப்பன் படம் இருந்த டி-ஷர்ட் அணிந்தும், 2 மாணவர்கள் அரசியல் கட்சி துண்டுகளை அணிந்தும் நடனம் ஆடினர். இதுகுறித்த புகார் எழுந்த நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை:
தமிழக அரசு பள்ளிகளில், இனி திரைப்பட பாடல்கள் ஒலிபரப்பி நடனம் ஆடுவது, ஜாதி சின்னங்கள் வைத்துக் கொள்வது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறான புகார்கள் எழுந்தால், சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீதும், மற்ற ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.