Mari Selvaraj (Photo Credit: @arulmozhi_25 X)

டிசம்பர் 19, தூத்துக்குடி (Thoothukudi): தமிழக தென்மாவட்டங்களில் கடந்த 16-ந் தேதி இரவு முதல் தொடர்ந்து அதீத கன மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாரிசெல்வராஜ் பதிவு: அதனைத் தொடர்ந்து இயக்குநர் மாரிசெல்வராஜ் தூத்துக்குடி பகுதிக்குச் சென்று நேரடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது… நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவும்… மீள்வோம்” பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். US says Operation Prosperity Guardian: அட்டூழியம் செய்யும் ஏமன் ஹவுதி அமைப்பு... பதிலடி கொடுக்க ரெடியான அமெரிக்கா..!

உதயநிதியுடன் சேர்ந்த மாரி செல்வராஜ்: தொடர்ந்து மாரி செல்வராஜ் அவரது சொந்த ஊருக்கு மீட்கும் பணிக்காக சென்றார். ஆனால் சொந்த ஊரான புளியங்குளத்திற்கு செல்ல முடியவில்லை என்று கூறி இருந்தார். மேலும், அங்கு ஆக்ரோஷமாக தண்ணீர் தேங்கியுள்ளது. அங்குள்ள மக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த கிராமத்தில் எனது பெற்றோர் இருக்கிறார்கள். அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வேதனையுடன் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் இணைந்து மீட்பு பணிக்கு உதவி செய்தனர்.

சர்ச்சையான மீட்பு மணி: அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மாரி செல்வராஜ்க்கு கட்சியில் என்ன பொறுப்பு உள்ளது? அவர் என்ன அரசு அதிகாரியா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினர். ஆனால் அதே நேரம் சிலர் தன் சொந்த ஊருக்கு அவர் முன்வந்து உதவுவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பி உள்ளனர். தற்போது தென் மாவட்ட மக்கள் பாதிப்பில் உள்ளதை அரசியல் களமாக்காமல், இறங்கி மக்களுக்கு உதவி செய்வதே அத்தியாவசியமான ஒன்று. சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது பல பிரபலங்கள் இறங்கி உதவி செய்தனர். அதேபோன்று இன்று இயக்குனர் மாரி செல்வராஜ் இறங்கி உதவி செய்யும் பொழுது, அவர் அமைச்சருக்கு நெருங்கியவர் என்ற ஒரே காரணத்திற்காக, அவர் செய்யும் உதவியை கேலி செய்வது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று ஆகும்.