
மார்ச் 20, நெல்லை (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இங்கு வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் (வயது 48) மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச் 19) மதியம் சுமார் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். TN Govt Jobs: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் வேலைக்கு 3,274 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!
பாலியல் புகார்:
அப்போது, மருத்துவர் பாலச்சந்தர் அந்த பெண்ணிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசி பாலியல் தொந்தரவு (Sexual Abuse) அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், இதுகுறித்து பணகுடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வள்ளியூர் காவல்துறையினர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் பாலச்சந்தர், இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது.
மருத்துவர் கைது:
இதனையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மருத்துவர் பாலச்சந்தரை கைது செய்தனர். பின்னர், அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3