TN Govt Bus (Photo Credit: Wikipedia)

மார்ச் 20, சென்னை (Chennai News): தமிழக அரசுப் போக்குவரத்துத்துறையில் சென்னை மாநகர், சென்னை, கோவை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, நெல்லை ஆகிய 8 போக்குவரத்து கழகங்களில், ஓட்டுநர், நடத்துனர் உட்பட 3,274 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தத் தேர்வுக்கு நாளை (மார்ச் 21) முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை http://arasubus.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நாய் வளர்ப்போர் கவனத்திற்கு.. வாய்ப்பூட்டு கட்டாயம்.., சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு..!

வயது மற்றும் கல்வித்தகுதி:

குறைந்தபட்சம் 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பொது வகுப்பினர் (OC) பிரிவில் 40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் 45 வயது பூர்த்தியாகாமலும் இருக்க வேண்டும். இதர வகுப்பினர் 55 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

முக்கிய தகுதி:

கனரக வாகன ஓட்டுநர் உரிமம், குறைந்தபட்ச 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவி சான்று, பொதுப்பணி வில்லை மற்றும் நடத்துநர் உரிமம் 2025ஆம் ஆண்டு ஜனவரி 01க்கு முன்பாக பெற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதி:

தெளிவான குறைபாடுகளற்ற கண்பார்வை பெற்றிருத்தல் வேண்டும். எவ்விதமான உடல் அங்க குறைபாடுகள் அற்றவராக இருத்தல் வேண்டும். உயரம் குறைந்தபட்சம் 160 சென்டி மீட்டர், எடை குறைந்தபட்சம் 50 கிலோ கிராம் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

எஸ்.சி.,/எஸ்.டி ரூ.590 (18% ஜி.எஸ்.,டி உட்பட) கட்டணமாகவும், இதர பிரிவினர் ரூ.1,180 (18% ஜி.எஸ்.,டி உட்பட) கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.