ஜூலை 11, மதுரை (Madurai News): மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் (Madurai-Rameshwaram NH) உள்ள புளியங்குளம் மேம்பாலம் கீழே, ரயில்வே தண்டவாளத்தில் மதுரை-ராமேஸ்வரம் இடையே ரயில் இன்ஜினின் (Train Engine) சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில்வே தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது, அதனைப் பார்த்து இன்ஜின் ஓட்டுநர் ஒலி எழுப்பியுள்ளார். ஆனால், நொடிப்பொழுதில் அவர்கள் மீது இன்ஜின் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். Pregnant Woman Dies By Suicide: 4 மாத கர்ப்பிணி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன..? காவல்துறையினர் விசாரணை..!
இதனையடுத்து, இன்ஜின் பைலட் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிலைமான் காவல்துறையினர் உயிரிழந்து கிடந்த இருவரின் உடலையும் மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்த விசாரணையில், விபத்தில் உயிரிழந்த இருவரும் புளியங்குளம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவரும் உத்தர பிரதேச மாநிலம், கோராக்பூர் பகுதியை சேர்ந்த மதுசூதன் ப்ராஜபதி (வயது 30) மற்றும் க்யானந்த பிரதாப் கௌத் (வயது 22) என்பது தெரியவந்துள்ளது.
இவர்களது உடலை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மதுசூதனன் ப்ராஜபதி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, இன்ஜின் வந்ததால் தடுமாறியுள்ளார். அதனால் அவரை கைப்பிடித்து காப்பற்ற முயன்ற க்யானந்த பிரதாப் மீதும் இன்ஜின் மோதியதால் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினரும் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.