செப்டம்பர் 20, கோவை (TamilNadu News): இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் பொதுப் போக்குவரத்து கொண்டு வருவதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. பிரதான் மந்திரி இ-பஸ் சேவை திட்டத்திற்கு 57 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி 10,000 எலக்ட்ரிக் பஸ்கள் இயங்க இருப்பதாக தெரிகிறது. மேலும் இதற்கான பணிகள் தற்போது தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த இ-பஸ் சேவை 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உடைய மாநகரங்களில் செயல்பட இருக்கிறது. அதன்படி மத்திய அரசு நாடு முழுவதும் 169 மாநகரங்களை தேர்ந்தெடுத்திருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 11 மாநகராட்சிகளில் இ-பஸ் செயல்பட இருக்கிறது. Samvidhan Sadan: பழைய நாடாளுமன்றத்திற்கு புதிய பெயர் வைத்த பிரதமர் மோடி: அரசியல் சாசன அவை.!
அந்த வரிசையில் முதலாவதாக கோவை மாவட்டம் இடம் பிடித்திருக்கிறது. 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கோவை மாநகரத்தில் 150 பேருந்துகள் இயங்குவதற்கான திட்டமிடப்பட்டிருக்கிறது. அடுத்தபடியாக திருச்சி மாவட்டத்தில் 100 பேருந்துகள் இயங்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்த இ-பஸ் சேவை செயல்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இ-பஸ் செயல்பாட்டுக்கு வந்தால், டீசல் செலவு குறைய தொடங்கும் என்று போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.