ஆகஸ்ட் 23, கொடைக்கானல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் (Kodaikanal) கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை, வருவாய் துறை, போக்குவரத்துத் துறை, தோட்டக்கலைதுறை, காவல்துறை என பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மலைப்பகுதி வாழ் விவசாயிகளும் ஊராட்சி மன்ற தலைவர்களும் தங்கள் குறைகளை கூறினர். அப்போது பேத்துப்பாறை பகுதியின் ஊர் தலைவர் மகேந்திரன் வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடத்தில் அரசாங்க விதிமுறைகளை பொருட்படுத்தாமல் நடிகர் பாபி சிம்ஹா (Bobby Simha) 3 மாடி கட்டடம் கட்டி வருவதாகக் கூறினார். மேலும் விவசாயிகள் பயன்படுத்துகின்ற சாலையை ஆக்கிரமித்து அந்த வழியாகச் செல்லும் விவசாயிகளை ஒருமையில் திட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். Karisma Kapoor: 49 வயதிலும் பில்டர் இல்லாமல் உதடு பிங்க் தான் - பெருமையாக பேசிய நடிகை; சுண்டியிழுக்கும் அழகால் தவிக்கும் ரசிகர்கள்.!
அதேபோல நடிகர் பிரகாஷ்ராஜ் (Actor Prakashraj) பேத்துப்பாறையின் நீர் பிடிப்பு பகுதியில் முறையான அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டுவதாகவும், அவருக்கு அனுமதி இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் அந்த வழியே பொதுமக்களை செல்லவிடாமல் தடுப்பதாகவும் அவர்கள் கூறினர்.
அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் ராஜா உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி சாலை மற்றும் கட்டிடங்கள் கட்டியதால் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹாவிற்கு வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.