அக்டோபர் 10, சென்னை (TamilNadu News): தமிழகத்தில், வேளாண் துறையில், வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால், தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. விதைப்பு தொடங்கி, அறுவடை வரையிலும் விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கான கருவிகள் கிடைக்க வழி செய்திருக்கிறது.
விவசாயிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இ-வாடகை என்ற செயலியின் மூலம் ஆன்லைனில் வேளாண் இயந்திரங்களை ரிசர்வ் செய்து கொள்ளலாம். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிமுகப்படுத்திய இந்த செயலியில் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வாடகைக்கு அளிக்கப்படும். Madhya Pradesh Shocker: ஊராட்சி மன்ற தலைவர் நடுரோட்டில் சுட்டுக்கொலை: கொலை வழக்கில் தப்பிக்க நடந்த மற்றொரு கொலையால் உறவினர்கள் கொந்தளிப்பு..!
தற்போது பெரும்பாலான விவசாயிகளிடம் செல்போன்கள் இருப்பதால், “உழவன் செயலி”, வேளாண்மை குறித்த பல்வேறு தகவல்களை விவசாயிகளுக்கு செல் போனில் வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது. இந்த செயலி 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இப்போது மேலும் 22 வகையான சேவைகளுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.
பயிர் சாகுபடிக்கு ஏற்ற விதைகள், வானிலை முன்னறிவிப்பு, உரங்கள், தமிழக அரசின் மானிய திட்டங்கள், வேளாண் துறையின் புதிய தொழில்நுட்பங்கள், என பல்வேறு தகவல்களையும், விளைச்சலில் லாபம் பெறுவதற்கான வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு செல்போன் மூலம் வழங்குவதே உழவன் செயலியின் நோக்கம்.
கூட்டுறவு சங்கங்கள் சார்பாக பதிவாளர் சுப்பையன், அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார், அதில், உழவன் செயலி வாயிலாகவும் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், உழவன் மற்றும் இ-வாடகை செயலிகளில் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், நேரடியாக வந்து அணுகும் விவசாயிகளுக்கும் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.