Fire Accident In Madurai Hospital (Photo Credit: @ANI X)

டிசம்பர் 31, மதுரை (Madurai News): மதுரை மாவட்டம், புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் 3வது மாடியில் இன்று (டிசம்பர் 31) காலை திடீரென தீ விபத்து (Fire Accident) ஏற்பட்டது. உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவலை தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். Parangimalai Sathya: தமிழகத்தை உலுக்கிய கல்லூரி மாணவி கொலை விவகாரம்; சாகும் வரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு.!

தீ விபத்து:

இந்த தீ விபத்து சம்பவத்தில் மருத்துவமனையில் (Hospital) இருந்தவர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட அந்த மாடியில் மருத்துவமனை செயல்படவில்லா என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நோயாளிகள் வேறு மாடி அறைக்கு மாற்றப்பட்டதால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மருத்துவமனையில் தீ விபத்து: