ஏப்ரல் 10, புதுடெல்லி (New Delhi): கடந்த 2023-ம் ஆண்டு இந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் (ISRO) சந்திரயான் 3 (Chandrayaan 3) விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்தியா தனது அடுத்த கட்ட செயல்பாட்டை நிகழ்த்துவதற்காக சந்திரயான் 4 (Chandrayaan 4) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த சந்திரயான் 4 திட்டத்தின் படி நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கி அங்கிருந்து சில சாம்பிள்களை எடுத்துக் கொண்டு மீண்டும் சந்திரயான் 4 விண்கலம் பூமிக்கு திரும்பும். ந்திரயான்-4 வெற்றி பெற்றால், சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை கொண்டு வரும் நான்காவது நாடாக இந்தியா உருமாறும்.
இந்த சந்திராயனின் முதல் பாகமான புரொபஷனல் ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து சென்றவுடன் அது சந்திரனை நோக்கி பயணிக்க உதவும். அடுத்த கட்டமான டிசென்டர் நிலவில் தரை இறங்குவதற்காக உதவும். பின்னர்அதலிருந்து வெளியேறும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் உள்ள சில சாம்பிள்களை கலெக்ட் செய்து மீண்டும் மாடுல் உள்ளே வரும். அது பூமிக்கு அனுப்பி வைக்கப்படும். Five Die In Bid To Save Cat: விலங்கைக் காப்பாற்ற போன மனிதநேயம்.. பூனையைக் காப்பாற்ற போன 5 பேர் பலி.. மஹாராஷ்டிராவில் பரபரப்பு..!
மேலும், சந்திராயன்-4 (Chandrayaan-4) திட்டம் குறித்த சுவாரசியமான அப்டேட்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Space Research Organisation) தலைவர் எஸ் சோமநாத் (ISRO chairman Somanath) தற்போது வெளியிட்டிருக்கிறார். அதாவது, இஸ்ரோ தலைவர் சந்திரயான்-4 திட்டம் குறித்து கூறியதாவது, "சந்திரயான்-4 வளரும் பணியில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின் படி, சந்திரயான்-4 திட்டம் 2040 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிலவில் தரையிறங்கும் இலக்கை கொண்டுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.
On #Chandrayaan4, #ISRO chairman S Somanath says "Chandrayaan-4 is a concept that we are now developing as a continuation of the Chandrayaan series. Our Prime Minister has announced that an Indian will land on the Moon in 2040, if that has to happen, we need to have a continuous… pic.twitter.com/81Ym2wMWSI
— ISRO InSight (@ISROSight) April 10, 2024