ஜனவரி 16, அலங்காநல்லூர் (Madurai News): உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு (Alanganallur Jallikattu 2025), இன்று நடைபெறுகிறது. சுமார் 2400 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இளைஞர்கள் & காளைகள் வாடிவாசலில் களம்கண்டு போட்டிகளை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்நாடு துணை முதல்வர் முக ஸ்டாலின், தனது மகனுடன் வந்து போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். Sankashti Chaturthi 2025: சங்கடஹர சதுர்த்தி 2025: விழாச்சிறப்பு, வாழ்த்துச் செய்தி இதோ.!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (Alanganallur Jallikattu Today):
பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டத்தின் முக்கிய விஷயங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டியில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண வெளிநாட்டவரும் வந்திருக்கின்றனர். இதனால் பார்வை அரங்கமும் சிறப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவித்து விடப்பட்டு, போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
மாஸ் காட்டிய காளை:
இதனிடையே, முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவின் காளை (Sellur K Raju), காளையை அடக்கும் வீரர் திமிலை பிடித்ததும் துள்ளியெழுந்து, அவரை கீழே தள்ளி ஓடியது. நடிகர் சூரியின் (Actor Soori) காளை வந்த வேகத்தில், வாமா மின்னல் பாணியில் தாவி ஓடியது. இதுதொடர்பான காணொளிகள் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது.
நடிகர் சூரியின் ராஜாக்கூர் காளை வாடிவாசலில் இருந்து வெளியேறிய காட்சி:
#WATCH | அசால்டாக வெற்றி பெற்ற நடிகர் சூரியின் 'ராஜாக்கூர் கருப்பன்' காளை!#SunNews | #AlanganallurJallikattu2025 | #Pongal2025 | #Jallikattu2025 | #Soori pic.twitter.com/f44Hi0eZYw
— Sun News (@sunnewstamil) January 16, 2025
திமிலை பிடித்த வீரரை தூக்கியெறிந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் காளை:
#WATCH | திமிலை பிடித்த வீரர் - திமிரோடு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் காளை!#SunNews | #AlanganallurJallikattu2025 | #Pongal2025 | #Jallikattu2025 | #SellurRaju pic.twitter.com/mRYQyi9l0N
— Sun News (@sunnewstamil) January 16, 2025