ஏப்ரல் 09, சென்னை (Chennai): உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல் தலைவரும் ஆன ஆர்.எம். வீரப்பன் (RM Veerappan) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 98. Lava ProWatch: லாவாவின் முதல் ஸ்மார்ட் வாட்ச்.. எப்போது ரிலீஸ் ஆக போதுன்னு தெரியுமா?.!

1953ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் நாடக மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை தொடங்கினார். இந்த நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பாளராக இருந்தவர், ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாக காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.