Surgery (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 23, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டம், மணமேடு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகள் கிருத்திகா (வயது 7). இவர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி, தனது தந்தையிடம் தின்பண்டம் வாங்க பணம் கேட்டுள்ளார். உடனே, அவர் 5 ரூபாய் நாணயத்தை எடுத்து கொடுத்துள்ளார். அந்த நாணயத்தை வாயில் வைத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். Computer Exploded In School: அரியலூர் அரசுப்பள்ளி ஆய்வகத்தில் வெடித்த கணினி.. 19 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

அப்போது, எதிர்பாராத விதமாக சிறுமி நாணயத்தை விழுங்கியுள்ளார். இதனால், சிறுமிக்கு மூச்சுத் திணறல் (Suffocation) ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த அவரது தந்தை, உடனே அந்த நாணயத்தை எடுக்க முயன்றுள்ளார். பின்னர், சிறுமியை மீட்டு, முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், உடனே திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். அங்கு சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், சிறுமியின் உணவுக்குழாயில் நாணயம் சிக்கி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சர்ஜிகல் கேஸ்ட்ரோ எண்ட்ராலஜி (Surgical Gastroenterology) துறை தலைவர் கண்ணன் தலைமையில், மருத்துவர்கள் கார்த்திகேயன், ராஜசேகர், சங்கர் ஆகியோர் இணைந்து, சிறுமியின் உணவுக் குழாயில் சிக்கியுள்ள நாணயத்தை நவீன முறையில் எடுக்க திட்டமிட்டனர். சிறுமியின் வாய் வழியே தொண்டைக்குள் நுண்ணிய கேமராவுடன் கூடிய கருவி, உள்ளே சிக்கியிருந்த நாணயத்தை வெளியே எடுத்தது. தற்போது, சிறுமி நலமுடன் இருக்கிறார். துரிதமாக செயல்பட்டு, சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.